ஆண்டு தோறும் மகா சிவராத்திரி தினத்தில் அகில இலங்கை சைவமகா சபையால் அறிவிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான அன்பே சிவம் விருது சமய, சமூக சேவகி, அறப்பணி அன்னை சோதிநாயகி குருசாமிக்கு எதிர்வரும்-11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளன்று யாழில் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளார்.
இதுதொடர்பில் அகில இலங்கை சைவமகாசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல நூறு ஆதரவற்ற குழந்தைகளிற்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களின் கல்வி உயர்வில் அம்மையார் அரும்பங்கு ஆற்றி வருகின்றார். தீவகத்தில் வீடற்ற ஏழை மக்களிற்கு அம்மையார் ஒருங்கிணைப்பில் அறக்கொடையாகக் காணிகள் பெறப்பட்டு வீடுகள் கட்டி வழங்கும் கைங்கரியங்களை அரச- அரச சார்பற்ற உதவிகளுடன் முன்னெடுத்து வருகின்றார்.

தீவகத்தில் ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனையின் உட்கட்டுமான மேம்பாடு, உபகரண அன்பளிப்புக்கள், மருத்துவமனைச் சிற்றுண்டிச்சாலை மீள் நிர்மாணம் எனக் கடல் கடந்த தீவுகளில் வதியும் நோயாளிகளின் நலனில் அம்மையார் பணி போற்றுதற்குரியது.
அறநெறிக் கல்வி, சிறார் சத்துணவுத் திட்டம் என்பவற்றுடன் குளங்கள் புனரமைப்புப் பணிகளிலும் அம்மையார் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
அண்மைய ஆண்டுகளில் சிறந்த சமய, சமூகப் பணிகளை முன்னெடுக்கும் சிவ மங்கையர்களை ஒருங்கிணைத்து அகில இலங்கை ரீதியாக அவர்களிற்குத் தலைமை வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார்.
புண்ணிய நாச்சியார், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற தலைசிறந்த ஈழத்து அறப்பணி அன்னைகளின் வழித்தடத்தில் பயணிக்கும் அதேநேரம் அதிக ஊடக வெளிச்சத்தைப் பெற்றிராத சிவசகோதரி செல்வி சோதிநாயகி குருசாமிக்கு அகில இலங்கை சைவமகா சபை உயரிய மானிடநேய சேவைக்காக ஆண்டுதோறும் வழங்கும் அன்பே சிவம் விருதினை வழங்கவுள்ளமையையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.