வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தில் நாளை புதன்கிழமை(29.01.2025) அபிராமிப் பட்டா் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை மாலை-03 மணிக்குப் பூசைகள் ஆரம்பமாகி மாலை-03.30 மணியளவில் அம்மனின் புகழ் பாடும் அபிராமி அந்தாதி பாடப்படும். தொடா்ந்து மாலை-04.30 மணியளவில் விசேட அபிஷேகமும், வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து அபிராமிப்பட்டருடன் துர்க்காதேவி உள்வீதி எழுந்தருளி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.