சுன்னாகம் தாளையடி பூரணை புஷ்கலை சமேத ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இன்று புதன்கிழமை (29.01.2025) இரவு-09 மணியளவில் ஆரம்பமானது.
நாளை வியாழக்கிழமை (30.01.2025) மாலை-05 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்த முடியுமென ஆலய மகா கும்பாபிஷேகப் பிரதிஸ்டா பி ரதமகுரு சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.