யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமனசிங்கம் ஞாபகார்த்தமாக அமையப்பெற்ற திறன் வகுப்பறையின் புதிய கட்டட தொகுதி இன்று வெள்ளிக்கிழமை 31.01.2024 மதியம் 12.30 மணியளவில் ஸ்கந்தா ஆரம்ப பாடசாலைக்கு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சிவசுப்பிரமணியம் நேதாஜி தலைமையில் இடம்பெற்றது.
இதனை சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமனசிங்கம் அறக்கட்டளையின் சார்பில் திரு. அ. உதயகுமார் (உடுவில்) அவர்களால் 25 மில்லியன் பெறுமதியில் அமையப்பெற்ற நான்கு திறன் பலகைகளைக் கொண்ட (Smart panel) வகுப்பறை புதிய கட்டடத்தொகுதி இன்று மாணவர்களின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.