தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை-08.21 மணி தொடக்கம் முற்பகல்-10.33 மணி வரையுள்ள மீன லக்ன சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகக் கிரியைகள் கடந்த திங்கட்கிழமை (27.01.2025) காலை-07 மணியளவில் ஆரம்பமானது. இந்நிலையில் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (31.01.2025) காலை-09.30 மணி முதல் இரவு-09 மணி வரையும், நேற்றுச் சனிக்கிழமை (01.02.2025) காலை-06 மணி முதல் மாலை-04 மணி வரையும் இடம்பெற்றது.
இதேவேளை, மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. .