மல்லாகத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

யாழ்.மல்லாகம் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு நாளை வியாழக்கிழமை (06.02.2025) பிற்பகல்-01 மணியளவில் மேற்படி பாடசாலை மைதானத்தில் அதிபர் சி.கணேசராசா தலைமையில்  சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.சஞ்ஜீவன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆசிரியையும், பழைய மாணவியுமான திருமதி.ரேணுகாதேவி கேசவன் சிறப்பு விருந்தினராகவும், மல்லாகம் மகாவித்தியாலய ஓய்வுநிலைப் பிரதி அதிபர் நடராஜா நந்தகோபன், மல்லாகம் மத்திக் கிராம அலுவலர் சிவபாதம் சுமந்திரன் மற்றும் தெல்லிப்பழைப் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திருமதி.சிறிஜெயகாந்தன் தர்மிலி ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.