சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலக சைவத் திருச் சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து முன்னெடுக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை நாளை வியாழக்கிழமை (20.02.2025) காலை-08 மணியளவில் தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
பாதயாத்திரை எதிர்வரும்-26 ஆம் திகதி புதன்கிழமை மகாசிவராத்திரி தினத்தன்று காலை திருக்கேதீச்சரம் ஆலயத்தைச் சென்றடையுமெனவும், பாதயாத்திரையில் இலங்கையின் எப் பாகத்திலிருந்தும் சிவனடியவர்கள் இணைந்து கொள்ள முடியுமெனவும் பாதயாத்திரை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.