யாழ்.கொட்டடி நமசிவாய வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு நாளை வியாழக்கிழமை (20.02.2025) பிற்பகல்-01.30 மணியளவில் கலைவாணி விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் சி.தவராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் சுப்பிரமணியம் நடராஜலிங்கம் பிரதம விருந்தினராகவும், 1996 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.