சைவபரிபாலன சபை நடாத்தும் புண்ணிய நாச்சியம்மையார் தினமும் பரிசளிப்பு விழாவும் நாளை புதன்கிழமை (19.02.2025) காலை-09 மணியளவில் யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள சைவபரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் சைவபரிபாலன சபையின் தலைவர் உ.தயானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.