நீர்வேலியில் பாரதியின் அஞ்சலி நிகழ்வு

ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமையும், மாற்றுத் திறனாளிகள் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தில் பொருளாளராகப் பணியாற்றியவருமான அமரர்.இராஜநாயகம் பாரதியின் அஞ்சலி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18.02.2025) மாலை-03 மணிக்கு யாழ்.நீர்வேலி தெற்கில் அமைந்துள்ளள கருவி நிறுவன மண்டபத்தில் கருவி நிறுவனத் தலைவர் கணபதி சர்வானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வில் இராஜநாயகம் பாரதிக்கான மெளனப் பிரார்த்தனையும், நினைவுரைகளும், பங்குபற்றுனர்கள் வழங்கும் இதயக் கூட்டிலிருந்து இரண்டு நிமிட உரைகளும், குடும்ப உறுப்பினர் தா.சுபேந்திரனின் ஏற்புரையும் இடம்பெறும்.