வெகுசிறப்பாக இடம்பெற்ற கொக்குவில் கிழக்கு ஐயப்பனின் 25 ஆவது தைப்பூச விழா

கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 25 ஆவது தைப்பூச விழா கடந்த வெள்ளிக்கிழமை (14.02.2025) வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

   

காலை-09 மணியளவில் ஆலய முன்றலில் பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகி முற்பகல்-10.30 மணியளவில் கருவறையில் சுயம்பு வடிவினராக வீற்றிருக்கும் ஐயப்பன் சுவாமிகளுக்குச் சிறப்பு  அபிஷேக வழிபாடுகளுடன் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்குப் பெரும் படையல் படைக்கப்பட்டு மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

இதேவேளை, நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத்தின் தைப்பூச விழாவில் கலந்து கொண்டனர்.