யாழ்.மயிலணி சைவமகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025 நாளை செவ்வாய்க்கிழமை (18.02.2025) பிற்பகல்-01.30 மணியளவில் மயிலணி முருகமூர்த்தி ஆலய முன்றலில் பாடசாலை அதிபர் பா.பார்த்தீபன் தலைமையில் இடம்பெறும்.
நிகழ்வில் வேலணைச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி அ.ஜெயக்குமரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.சி.சயந்தன் சிறப்பு விருந்தினராகவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பழைய மாணவன் பொ.ஸ்ரீறஞ்சன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.