சிறீதரன் எம்பியையும், சுமந்திரனையும் தமிழரசுக் கட்சியிலிருந்து ஒரு வருடத்திற்குச் செயற்பாடற்றவர்களாக ஆக்கிவிட்டுக் கட்சியை ஒற்றுமைப்படுத்தினால் ஒற்றுமைப்படுத்தலாம். அல்லது தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமை என்பது நடக்கப் போவதே இல்லை என அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா-2025 நிகழ்களின் மூன்றாம் நாள் மாலை நிகழ்வுகள் நேற்றுச் சனிக்கிழமை(15.02.2025) மாலை நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.