யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி-2025 நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (18.02.2024) மேற்படி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், கோண்டாவில் ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத் தலைவர் துரைவீரசிங்கம் சுதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.