தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் பவ்ரல் அமைப்பின் நீண்ட நாள் செயற்பாட்டாளர் அமரர்.சிறீதரன் சபாநாயகத்தின் மூன்றாவது மாத நினைவையொட்டி நாளை சனிக்கிழமை(22.02.2025) காலை-09 மணி முதல் யாழ்.அரியாலை நெடுங்குளம் சந்தியில் அமைந்துள்ள சர்வோதய அமைப்பின் தலைமையகத்தில் இரத்ததான நிகழ்வும், உள்ளுராட்சித் தேர்தல் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் முகமட் கலந்து கொள்ளவுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் சட்டங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வதன் மூலம் சிறந்த உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிவகை தொடர்பான கலந்துரையாடல், இலவச சட்ட உதவி தேவைப்படுவோருக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கல் என்பன இடம்பெறும்.இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.