வியாபார நிறுவனமாக மாறிவரும் தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையம்

 

பாரம்பரியம் மிக்க தொன்மை மிக்க பல தசாப்தங்களை கடந்து வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் மிகப்பெரும் பங்காற்றிக்கொண்டு இணைந்து செயற்பட்டுகொண்டிருக்கும் தேசிய வெளிக்கள நிலையம் தொண்டைமானாறு இன்று அதன் சுயங்களை இழந்து கல்வி பின்னணியை விட்டு விலத்தி மாணவர் நலன்களையும் விட்டு விலத்தி வியாபார நோக்கான நிறுவனமாக மாறிக்கொண்டு வருகின்றது.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (09) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடமம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தின் நிறைவேற்று அதிகார செயற்குழு உறுப்பினரும் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளருமான பரா. கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரம்பரியம் மிக்க தொன்மை மிக்க பல தசாப்தங்களை கடந்து வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் மிகப்பெரும் பங்காற்றிக்கொண்டு இணைந்து செயற்பட்டுகொண்டிருக்கும் தேசிய வெளிக்கள நிலையம் தொண்டைமானாறு இன்று அதன் சுயங்களை இழந்து கல்வி பின்னணியை விட்டு விலத்தி மாணவர் நலன்களையும் விட்டு விலத்தி வியாபார நோக்கான நிறுவனமாக மாறிக்கொண்டு வருகின்றது.

வடபிராந்தியத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோகக்த்துடன் கல்வி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய வெளிக்கள நிலையமானது அக்காலத்தில் நிலவிய கல்வி முறைக்கமைவாக பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுடைய ஆளுகைக்குள் உட்படுத்தப்பட்டு அவர்களுடைய பங்குபற்றுதலுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரைக்கும் இயங்கிவந்தது.

ஆனால் அதற்கு பின் இதன் நிலைமை என்ன? வடக்கு மாகாணத்தை பொறுத்தவரைக்கும் கல்வியே எங்கள் மூலதனம். ஆனால் இன்று அதில் ஊழல்வாதிகளாக காணப்படும் ஓய்வுநிலை கல்வியாளர்களும் ஒரு சில பல்கலைக்கழகத்தை சேர்ந்த விரிவுரையாளர்களும் தனிப்பட்ட வருமாணனத்தை ஈட்டுவதற்காகவும், தனிப்பட்ட வருமானத்தை பெருக்குவதற்காகவும் தேசிய வெளிக்கள நிலையத்தின் நிலையான வைப்புகளில் இருக்கும் பெரும் தொகையான நிதியினை தங்கள் இஸ்டத்திற்கு பயன்படுத்துவதற்குமாக இந்த நிறுவனத்தை மாகாண கல்வித்திணைக்கத்தின் ஆளுகையில் இருந்து வெளிப்படுத்தி தனியே இரகசியமாக அதனை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு, ஆளுநர் செயலகம், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர் இணைந்து இதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்குறித்த அனைவருக்கும் எழுத்து மூலம் எங்களுடைய குற்றச்சட்டுகளை முன்வைத்துள்ளோம்.

அதனடிப்படையில் மாகாண கல்வி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தேசிய வெளிக்கள நிலையத்தினை மீள சீர்படுத்தி திருடர்களின் கைகளில் இருந்து மீட்டெடுத்து மீளவும் மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆளுகைக்கு உட்படுத்தி அதனை தேசிய வெளிக்கள நிலையத்தின் கோட்பாட்டிற்கு அமைவாக வடக்கு பிராந்தியத்தின் கல்வி அபிவிருத்திக்காக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் காலமாக தேசிய வெளிக்கள நிலையமானது தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலோசனைக்கு அமைவாக அவர்களின் கல்வித் திட்டத்திற்கு அமைவாக தவணைப் பரீட்சைகளை நடத்தி வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று வடக்கு மாகாணத்தில் அவ்வாறான தவணை பரீட்சைகள் பொது மதிப்பீடுகள் எவையும் செய்யப்படுவது இல்லை. ஏனெனில் அது 2023 ஆம் ஆண்டு யாப்பு விதிகளை மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளரினால் முற்று முழுதாக தடைசெய்யப்பட்டது. அத்துடன் அதனை சீர்செய்யும்படி மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்திய வேளையிலும் அவர்கள் அதை சீர் செய்யாமல் தொடர்ந்து அமைப்பு விதிகளை மீறி புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது.

எஸ்.வி.மேகேந்திரன் என்பவர் தனக்கு உகந்த நபர்களை பொறுப்புகளில் நியமித்து மாகாண கல்விப் பணிப்பாளரது அறிவுறுத்தலை செயற்படுத்தாது இயங்கி வருகின்றனர். பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் நிதிகளையும் தனக்கு சார்பான ஓய்வூதியர்களை வைத்துக்கொண்டு எஸ்.வி.மகேந்திரன் இயக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். அடுத்து வரும் சந்ததியினருக்கு நாங்கள் வழிவிட வேண்டும். புதிய புதிய விடயங்களை உள்ளீர்க்க வேண்டும். இவ்வாறு எதனையும் செய்யாமல் அடுத்த சந்ததியை வளர்த்து விடாமல் ஓய்வு நிலையில் இருக்கும் நாங்களே ஆட்சியை நடத்த வேண்டும். நாங்களே கலிவியிலாளர்களாக இருக்க வேண்டும். நாங்கள் தான் ஆள்பவர்களாக இருக்க வேண்டும். எங்களிடமே இந்த நிதி கையாளுகைகள் இருக்க வேண்டும் என்ற வகையில் செயற்பட்டு வருவது மிகவும் மனவேதனைக்கு உரிய விடயமாகும். இதனை மிக வேகமாக சீர் செய்ய வேண்டும்.

இன்றைய தினம் (நேற்று) கூட மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி பெறப்படாது இரகசிய கூட்டம் ஒன்று தேசிய வெளிக்கள நிலையம் தொண்டைமானாறில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கூடாகவும் மீண்டும் ஒரு குழு தங்களை பலப்படுத்திக் கொண்டு இயங்க உள்ளது. இந்த கழுவை தொடர்ந்தும் இயங்க விடமுடியாது. 2023 ஆம் ஆண்டு மாகாண கல்விப் பணிப்பாளரினால் விசாரணக்கு உட்படுப்பட்ட நிதி கையாளுகைகள், நிதி பிரமானங்கள் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும்.

நிதி கையாளுகை என்பது குடும்ப உறுப்பினர்களை வைத்துக் கொண்டு தற்போதைய பொருளாளரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை ஒரு தவறான முன்னதாரணம் ஆகும். யாப்பு விதிகளையும் நிதிப் பிரமானங்களையும் மீறிய செயற்பாடுகளாலேயே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் நாள் அன்றைய தினம் மாகாண கல்விப் பணிப்பாளரராக இருந்த ஜோன் குயின்ரஸ் திருஞானம் அவர்களால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். ஆனால் இன்றுவரை சீர் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்ட விடயங்கள் எவையும் சீர்செய்யப்படாது உள்ளது.

மேற்குறித்த விடயங்களை சீர்செய்வதற்கு ஆளுநர் நா.வேதநாயகம் ஐயா அவர்களுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லி, பிரதம செயலாளர் இளங்கோவன், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் இது தொடர்பான நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிறைவேற்று செயற்குழு அங்கத்தவர்கள் ஆகிய எம்மால் சீர்படுத்தல் வேண்டுகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. என்வே இந்த நிறுவனத்தின் நன்மையை முன்னிட்டும் எமது மாணவ சந்ததிகளின் நன்மையை முன்னிட்டும் யாப்பின் அடிப்படையிலும் இந்த நிறுவனம் இயங்குவதற்கு எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி தேசிய வெளிக்கள நிலையத்தை சீர்ப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.