யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடம் "இந்துக் கலைகள் ஒரு பன்முகப் பார்வை" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள மூன்றாவது சர்வதேச இந்து மாநாடு-2025 இன்று வியாழக்கிழமை (06.03.2025) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் வெகுசிறப்பாக ஆரம்பமானது.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(07.03.2025) பிற்பகல்-02 மணி முதல் இடம்பெறும். நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை வருகை விரிவுரையாளர் பொன்.ஸ்ரீவாமதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர். குறித்த நிகழ்வில் கலைஞர் கெளரவிப்புடன் இசையரங்கு, நாட்டாரிசை, நாட்டியநாடகம், பன்றிப் பள்ளு போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெறும்.
இதேவேளை, மாநாட்டின் ஆய்வரங்க நிகழ்வுகள் நாளை காலை-08.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.