சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் சி.சிவராஜன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடலில் கோகிலா மகேந்திரனின் "இணைகரத்தின் அயற்கோணங்கள்" சிறுகதை தொகுதி வெளியீடும், அனைத்துலக மகளிர் தினமும் "விழிசைச் சிவம்" நல்ல பெண்மணி விருது வழங்கல் நிகழ்வும், "வாழ்வின் தெரிவுகள்" பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கி. மகேந்திரராஜா அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள், சாதனைச் சிறுவர் பரிசு வழங்கல், "இணைகரத்தின் அயற்கோணங்கள்" சிறுகதை விமர்சன அரங்கும், ஒலிவடிவ சிறுகதா நிகழ்வும், "ஒரு சோகம் இறுகும் போது" சிறுகதா நிகழ்வு ஆகியன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.