யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடம் "இந்துக் கலைகள் ஒரு பன்முகப் பார்வை" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள மூன்றாவது சர்வதேச இந்து மாநாடு-2025 நாளை வியாழக்கிழமை (06.03.2025) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைகளில் (07.03.2025) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் முதலாம்நாள் நிகழ்வு 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-08.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார். நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறையைச் சேர்ந்த மல்லிகா இராஜரட்ணம் ஆதார சுருதியுரை ஆற்றுவார். ஆய்வடங்கல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அன்றையதினம் பிற்பகல்-01 மணிக்கு ஆய்வரங்க அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெறும். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல்-02 மணி முதல் நடைபெறும்.