கோண்டாவில் கிழக்கு நாகபூசணி அம்பாள் ஆலய மாசி மக உற்சவம் நாளை புதன்கிழமை (12.03.2025) காலை-08.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகமும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகமும் இடம்பெறும். பூசைகள் நடைபெற்று வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி எழுந்தருளி உலா வந்து திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தம் நடைபெறும். மதியம் அன்னதான நிகழ்வும் இடம்பெறும்.