வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய மாசிமகப் பெருவிழா-2025 நாளை புதன்கிழமை (12.03.2025) சிறப்பாக நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை-04.30 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை-05 மணியளவில் உஷக்காலப் பூசை, அதிகாலை-05.30 மணியளவில் உஷக்காலப் பூசை, அதிகாலை-05.30 மணியளவில் காலைச்சந்திப் பூசை, காலை-06 மணியளவில் வசந்தமண்டபப் பூசை, காலை-06.30 மணியளவில் தெல்லிப்பழை துர்க்கா புஷ்கரணியில் மாசிமகத் தீர்த்தம், காலை-07.30 மணியளவில் சங்கற்பம், காலை-08.30 மணியளவில் திராவியாபிஷேகம், காலை-09.30 மணியளவில் அபிஷேகம், முற்பகல்-10 மணியளவில் உச்சிக்காலப் பூசை என்பன இடம்பெறும். முற்பகல்-10.30 மணியளவில் ஸ்வர்ண பத்ம புஸ்பார்ச்சனையைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் அம்பாள் சிறிய தேரில் உள்வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும்.
இதேவேளை, மாசிமகத்தை முன்னிட்டு நாளை காலை-07.30 மணியளவில் தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தை நோக்கிப் பால்குடப் பவனி ஆரம்பமாகும்.