தமிழ்மக்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகை சித்திரைப் புத்தாண்டு!

தமிழ்மக்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாகக் காணப்படும் சித்திரைப் புத்தாண்டு இலங்கையில் தமிழ்- சிங்களப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும், தற்போது தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் உலக நாடுகளிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.     

சூரியன் மேஷராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு மீன ராசியிலிருந்து வெளியேறும் போது முடிவடைகின்றது. அதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகின்றது. ஜோதிடப்படி சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சிக்க கூடிய காலம் ஒரு தமிழ் மாதமாகப் பார்க்கப்படுகிறது. 

பண்டைக் கால ஜாதகத்தில் முதல் ராசியாக இருக்கும் மேஷ ராசியில் சூரியனின் பெயர்ச்சி நடக்கக் கூடிய காலம் சித்திரை மாதம் எனப்படுகிறது. இதன் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு ஒழுங்கு முறை அடிப்படையில் இன்று பிறந்துள்ள விசுவாவசு வருடம் 39 ஆவது வருடமாகக் காணப்படுகிறது.  

பிறந்துள்ள விசுவாசு வருடம் அனைத்து மக்களினதும் வாழ்வில் அமைதியும்,  ஆரோக்கியமும், சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டாக அமைய எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் நல்லருள் புரிவாராக.

வேலுப்பிள்ளை சிவகுருநாதன்,
சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர்.