இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான இளஞ் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம்-16,17,18  ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு ஆனைப்பந்தி  இந்து மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறும். மேமாதம்-16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-02.30 மணியளவில் வரலாறு ,17 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09 மணியளவில் சாத்திரம், பிற்பகல்-02 மணியளவில் உரைநடை, 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணியளவில் இலக்கியம், அன்றையதினம் பிற்பகல்-02 மணியளவில் இலக்கணம் ஆகிய பாடங்களுக்குரிய பரீட்சைகள் இடம்பெறும். பரீட்சார்த்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் மே மாதம் முதல் வாரத்தில் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.