திருமணம் முடிந்து ஆறே நாட்களில் பலியான சோகம்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22.04.2025) பயங்கரவாதிகளால் சரமாரியாக நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் திருமணம் நடந்து ஆறு நாட்களேயான இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால்  உயிரிழந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அவரது மனைவியுடன் சுற்றுலா சென்ற போதே இந்தச் சம்பவம் பதிவாகி இந்தியாவில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.