போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்: மீண்டும் தாக்குதல்!

போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று இரவு மீண்டும் டிரோன் தாக்குதல் நடாத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சில மணித்தியாலங்களில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறித் தாக்குதல் நடாத்தி வருகிறது.