செம்மணி சித்துபாத்தி இந்துமயான மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம்: நாவற்குழியில் போராட்டம்!

அரியாலை செம்மணி சித்துபாத்தி இந்துமயானத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (05.06.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.