சரவணமுத்துச் சுவாமிகள் (ஆனந்த சடச்சரகுரு) எனும் சித்தரால் ஸ்தாபிக்கப்பட்ட குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) காலை-07.26 மணி முதல் காலை-08.26 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் இன்று நண்பகல்-12 மணியளவில் ஆரம்பமாகும். நாளை சனிக்கிழமை (07.06.2025) காலை-06 மணி முதல் மாலை-04 மணி வரை அடியவர்கள் தங்கள் கைகளால் எண்ணெய்க் காப்புச் சாத்த முடியுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.