திருகோணமலையில் சுவைநிலா பலகாரக் கடை திறப்புவிழா வெகு விமரிசை

 

திருகோணமலையில்  “சுவை நிலா” பலகாரக் கடை திறப்பு விழா 05.06.2025 காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. 


KITES நிறுவனத்தின் தலைவி டொரின் பற்றீசியா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை, SED நிறுவன பணிப்பாளர் பிரளனவன்  மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் செயலாளர் மதிவாணன் உணவகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். 

KITES நிறுவனத்தின் வழிகாட்டலில் வடகரை வீதி, திருக்கடலூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுவைநிலா ஆரோக்கிய உணவகத்தில் பத்து பெண்கள் தொழில் முனைவோர்களால் சிறுதானிய உணவுகள் மற்றும் இயற்கையான பானங்கள், ஆரோக்கிய உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் கூட்டிணைவால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.