கோண்டாவில் ஞானப்பழனி முருகன் தேர்த் திருவிழா

கோண்டாவில் கிழக்கு ஞானப்பழனி முருகன் ஆலய முப்பத்தி மூன்றாவது விசுவாவசு வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நாளை திங்கட்கிழமை (09.06.2025) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தோற்சவமும், நாளை மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.