'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) முற்பகல்-10 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
ஆடிப்பூர நன்னாளான நாளை மறுதினம் திங்கட்கிழமை (28.07.2025) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறுமென ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.