பேராசிரியர் தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு

தமிழ் கூறும் நல்லுலகின் கல்வியியலாளரும், நவீன முற்போக்குச்  சிந்தனையாளரும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர். சி.தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) மாலை-04 மணியளவில் கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசியக் கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.   

மேற்படி நிகழ்வில் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் க.தணிகாசலம், இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.ரமேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.ம.திருவரங்கன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரைகள் வழங்குவர். 

இதேவேளை, கலை, இலக்கிய, சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தேசியகலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.