நல்லூர் பெருந் திருவிழாக் காலத்தில் தினமும் வெளிவீதியில் பஜனை

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இறை பக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போன்று இவ் வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் மேற்படி ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் நடைபெறும்.