தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை (25.08.2025) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இன்று காலை-06 மணியளவில் அபிஷேக வழிபாடுகள் ஆரம்பமாகும். இன்று காலை-07 மணியளவில் கொடியேற்ற உற்சவத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகும். காலை-08.45 மணியளவில் வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து கொடியேற்ற உற்சவம் நடைபெறும்.
 
இதேவேளை, இன்று ஆரம்பமாகும் மஹோற்சவப் பெருவிழா தொடர்ந்தும் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறும்.