பேராசிரியர். வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்தத் தமிழ்வேள்வி நிகழ்வு

தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் பேராசிரியர் கலாநிதி.சு.வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்தத் தமிழ்வேள்வி– 2025 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24.08.2025) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடக் கூவர் அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, முன்னாள் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.