யாழ்ப்பாணம், மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள நர்மதா கோல்ட் சென்ரரின் பதினைந்தாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.08.2025) காலை-09 மணி முதல் மேற்படி நிறுவன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், குருதிக் கொடையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.