செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படுமென யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை (14.08.2025) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அரியாலை சித்துபாத்தி செம்மணி சித்துபாத்தி இந்துமயான வளாகத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இந்த மாதம்- 07 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 07 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக மொத்தமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 147 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் அவற்றில் 133 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.