யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் பொதுச் சத்திரசிகிச்சை நிபுணரும், குழாய்வழி சத்திர சிகிச்சை இமயம் எனப் போற்றப்படுபவருமான வெங்கடாசலம் சுதர்சன் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு கருத்துரை வழங்குவதற்காகச் சென்ற போது திடீர் மாரடைப்புக் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) தனது-49 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞானவைரவர் வீதி, கோண்டாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) முற்பகல்-11 மணியளவில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் பிற்பகல்-12.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படுமென அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.