மாரீசன்கூடல் பங்கு இளையோர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை இளவாலையில் அமைந்துள்ள போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் உதிரம் கொடுத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.