தெல்லிப்பழை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகப் பெருமானுக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட புதிய சித்திரத்தோ் வெள்ளோட்ட விழா நாளை புதன்கிழமை (20.08.2025) மாலை-04 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை பிற்பகல்-02 மணியளவில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து நாளை மாலை-04 மணியளவில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும்.
நிகழ்வில் புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட மலர் வெளியீடு, கலைஞர்கள் கெளரவிப்பு, மங்களநாத இசை, பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், சிலம்படி நிகழ்ச்சி, குதிரைகள் நடைபவனி, பொம்மலாட்டம், மயிலாட்டம், நாட்டியாஞ்சலி மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறும்.
இதேவேளை, புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.