வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் இருபத்தொராம் நாள் காலை உற்சவமான கஜவல்லி மஹாவல்லி உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (18.08.2025) காலை மிகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
நேற்றுக் காலை-06.45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானையின் இணைந்த வடிவமான கஜவல்லி மஹாவல்லி பல நூற்றுகணக்கான அடியவர்கள் புடைசூழ தங்க அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் திருக்காட்சி நடைபெற்றது.
இதேவேளை, கஜவல்லி மஹாவல்லி உற்சவம் நல்லூரானுக்கே உரிய தனித்துவமான விசேட உற்சவம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.