தமிழர் வாழ்வுரிமை மையத்தின் ஏற்பாட்டில் கிரிஷாந்தி கொலை வழக்கு விசாரணைத் தொகுப்பு நூலான வன்மம் நூல் அறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (02.09.2025) மாலை-04 மணிக்கு யாழ் செம்மணிச் சந்தியில் அரசியல், சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் அருட்பணி வசந்தன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், நாகமுத்து இன்பநாயகம், கத்யான அமரசிங்க, தரிந்து உடுவரகெதர, நடராஜா ஜனகன், யூட் டினேஷ், ரனித்தா ஞானராஜா, வீரசிங்கம், உதயசீலன் கற்கண்டு, நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்தவுள்ளனர்.

