இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டேன்- 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுப் புதிய விலையாக 283 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுப் புதிய விலையாக 313 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

