இறுதிவரை குருதிக் கொடைக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர்.துரைசாமி சக்திவேலின் முதலாவது ஆண்டு நினைவாக வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கமும், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெறுகிறது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடை வழங்குபவர்களில் குருதிக் கொடையாளரொருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு மிகவும் பெறுமதியான வெள்ளிப் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்படும். அத்துடன் இரத்ததானம் வழங்கும் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்படும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு உயிர் காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.