திலீபன் நினைவாக நல்லூரில் பயன்தரு மரக்கன்றுகள் கையளிப்பு

தியாகதீபம் திலீபனின் 38 ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவாக  உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினரால் 200 இற்கும் மேற்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை (26.09.2025) நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் வைத்துப் பொதுமக்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.