இயற்கைப் பேரிடரின் பின்னரான காலப் பகுதியில் குருதியின் தேவை அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு ஜொலி ஸ்டார் விளையாட்டுக் கழகம், ICBTS Campus இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04.12.2025) காலை முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு உயிர்காக்கும் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

