பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரும்பிராய், கோண்டாவிலில் இன்று பொருட்கள் சேகரிப்பு!

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகம் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடத் தேவையான பொருட்களை இன்று சனிக்கிழமை (06.12.2025) யாழில் சேகரிக்கவுள்ளது. 

இன்று காலை-08 மணி முதல் மாலை-04 மணி வரை கோண்டாவில் கிழக்குச் சந்தி,  உரும்பிராய் ஒஸ்கார் வீதிக்கு அருகில் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களில் உலர் உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள்,  சிறுவர்களுக்கான பால்மா வகைகள், நுளம்பு வலை, தண்ணீர்ப் போத்தல்கள், ஆடைகள் போன்ற பொருட்களைப் பொதுமக்கள் நேரடியாக வழங்கி உதவ முடியுமென யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.    

தொடர்புகளுக்கு:-  

லயன் அழகரத்தினம் பிரபாகரன் (JP) — 0776241573  

தரணிகன் — 0740866670  

பரணிகன் — 0740188254