மானிப்பாய் மருதடி விநாயகப் பெருமானின் மஹோற்சவத்தை முன்னிட்டு இளைஞர்களின் நற்பணி!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகா் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டு மானிப்பாய் வடக்கு இளைஞா் தாகசாந்தி நிலையத்தினர் வருடா வருடம் தண்ணீர்ப் பந்தல் அமைத்து  ஆலயத்துக்குச் செல்லும் அடியவா்களுக்கும், வீதியால் செல்வோருக்கும் தாகம் தீா்க்கும் பெரும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.   

அந்த வகையில் இந்த வருடம் 36 ஆவது வருடமாக வீதியோரங்களைச் சுத்தப்படுத்தித் தண்ணீா்ப் பந்தல் அமைத்துத் தாகம் தீா்க்கும் பணியை மேற்படி இளைஞர் தாகசாந்தி நிலையத்தைச் சேர்ந்த இளைஞர்களான தொண்டர்கள் மருதடி விநாயகரின் மஹோற்சவப் பெருந் திருவிழாவின் கொடியேற்றத் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை, இளைஞர்களின் இந்தச் செயற்பாட்டைப் முன்மாதிரியான பணி எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.