யாழ்.ஊரெழுப் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல், 400 லீற்றர் மண்ணெண்ணை என்பன யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவால் ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான குறித்த சந்தேகநபரை விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

