வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாமும் கெளரவிப்பும்

வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் 85 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானப் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு குருதிக் கொடை முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

இதேவேளை, வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் ஊடாக 50 தடவைகளுக்கு மேலாகக் குருதிக் கொடை வழங்கிய நான்கு பேர் இன்றைய தினம் பிற்பகல்-02 மணியளவில் வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியிலிருந்து நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபம் வரை நடை பவனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசேட கெளரவிப்பு வழங்கப்படுமெனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.