ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியமும், நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்தும் ஆக்கங்கள் எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) மாலை-04 மணியளவில் யாழ் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் இடம்பெறும்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி.தி.செல்வமனோகரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த. அஜந்தகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்வர்.

